தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்புசத்துணவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு சத்துணவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-09-11 19:30 GMT

தர்மபுரி:

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு சத்துணவு பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தர்மபுரி மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அண்ணாதுரை வரவேற்றார். மாவட்ட பொருளாளர் ஜெயந்தி, மாவட்ட பிரசார செயலாளர் மாது, மாவட்ட துணைத்தலைவர் கணேசன், மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் புனிதா, சந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநில தலைவர் ராஜேந்திரன், மாநில பொதுச் செயலாளர் சிவாஜி, மாநில பொருளாளர் எசயாகுருபாதம், மாநில துணைத்தலைவர் செங்குட்டுவன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

கால முறை ஊதியம்

முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டப்பணிகளை சத்துணவு பணியாளர்கள் மூலம் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் குறைந்த ஊதியத்தில் பணிபுரியும் சத்துணவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் சத்துணவு பணியாளர்களுக்கு அடிப்படை ஊதியத்துடன் குடும்ப நல ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பேசினார்கள். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு பணியாளர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்