தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,500 வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டங்களில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய வேண்டும். 70 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் துரைராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். இதில், சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.