பனிப்பொழிவில் இருந்து நாற்றுகளுக்கு பாதுகாப்பு

பனிப்பொழிவில் இருந்து நாற்றுகளுக்கு பாதுகாப்பு

Update: 2023-02-04 18:45 GMT

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் உறை பனி தாக்கம் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு நவம்பர் மாதம் 24-ந் தேதி தொடங்கியது. தற்போது உறைபனி தாக்கம் குறைந்து விட்டது. ஆனாலும் அவ்வப்போது நீர் பனி மற்றும் உறைபனி லேசாக இருக்கிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகள் மற்றும் நீரோடைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் செடிகள் கருக தொடங்கி விட்டன. பனியில் இருந்து பாதுகாக்க காலை மற்றும் மாலை நேரங்களில் ஸ்பிரிங்லர் மூலம் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.

ஊட்டி தாவரவியல் பூங்கா, மரவியல் பூங்கா, ரோஜா பூங்காக்களில் உள்ள மலர் நாற்றுகள் மற்றும் அலங்கார செடிகள் மீது கோத்தகிரி மிலார் செடிகளை கொண்டு மூடி பாதுகாக்கப்பட்டு வருகிறது. தாவரவியல் பூங்காவில் உள்ள புல் மைதானம் சேதமடையாத வகையில் புல் மைதானத்திற்கு காலையில் தண்ணீர் பாய்ச்சும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும்,தொட்டிகளில் நடவு செய்யப்பட்டுள்ள மலர் நாற்றுக்கள் பாதிக்காமல் இருக்க பிளாஸ்டிக் போர்வை கொண்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. பனியின் காரணமாக ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தற்போது கடும் குளிர் நிலவுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகையும் மிக குறைவாகவே உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்