இந்திய மீனவர்களின் மீன்பிடி உரிமையை பாதுகாத்திடுக - பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
இந்திய மீனவர்களின் மீன்பிடி உரிமையை பாதுகாத்திட பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை,
2 நாள் பயணமாக இன்று இந்தியா வரும் இலங்கை ஜனாதிபதியிடம் மீனவர்கள் விவகாரம் தொடர்பாக வலியுறுத்த பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடித்ததில், "இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்திட, இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்களது உரிமைகள் மற்றும் சுதந்திரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்திட இலங்கை அதிபரை வலியுறுத்திட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.