திறந்த வெளியில் உணவு தயாரிப்பு: நாகர்கோவிலில் 9 ஓட்டல்களில் புரோட்டா கல் பறிமுதல்;அதிகாரிகள் நடவடிக்கை

நாகர்கோவிலில் திறந்த வெளியில் உணவு தயாரித்த 9 ஓட்டல்களில் புரோட்டா கல்லை பறிமுதல் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2022-10-11 20:45 GMT

நாகர்கோவில், 

நாகர்கோவிலில் திறந்த வெளியில் உணவு தயாரித்த 9 ஓட்டல்களில் புரோட்டா கல்லை பறிமுதல் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

திறந்த வெளியில் உணவு...

நாகர்கோவிலில் திறந்த வெளியில் உணவு தயாரித்து விற்பனை செய்யக்கூடாது என ஓட்டல் உரிமையாளர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மேயர் மகேஷ் மற்றும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

எனினும் சிலர் தொடர்ந்து ஓட்டலின் வெளியே வைத்து புரோட்டா தயாரித்து வந்ததாக குற்றச்சாட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று காலையில் சுகாதார ஆய்வாளர் ராஜேஷ் தலைமையிலான ஊழியர்கள் ஒழுகினசேரி முதல் மீனாட்சிபுரம் வரை உள்ள ஓட்டல்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

புரோட்டா கல் பறிமுதல்

அப்போது ஓட்டல்களின் வெளியே புரோட்டா கல் போடப்பட்டு உணவு தயாரிக்கப்பட்டது தெரிய வந்தது. உடனே அந்த கடைகளில் புரோட்டா கற்களை பறிமுதல் செய்தனர்.

அந்த வகையில் மொத்தம் 9 ஓட்டல்களில் இருந்த புரோட்டா கற்களை ஊழியர்கள் மாநகராட்சி டெம்போக்களில் ஏற்றிக் கொண்டு சென்றனர். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இதேபோல் சில ஓட்டல்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்