கஞ்சா விற்ற புரோட்டா கடைக்காரர் கைது

பாவூர்சத்திரத்தில் கஞ்சா விற்ற புரோட்டா கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-07 18:45 GMT

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் கே.டி.சி. நகர் 3-வது தெருவில் வசித்து வருபவர் செய்யது அலி (வயது 42). இவர் அந்த பகுதியில் புரோட்டா கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பாவூர்சத்திரம் போலீசார் விரைந்து சென்று அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 கிலோ 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்