பெண்களை வைத்து விபசாரம்; 5 பேர் கைது
பெண்களை வைத்து விபசாரம்; 5 பேர் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அறந்தாங்கியில் ஒரு வீட்டில் பெண்களை வைத்து விபசாரம் நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய அறந்தாங்கியை சேர்ந்த அஜ்மீர் பானு (வயது 52), வீட்டு உரிமையாளரான பூமணி (52), தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை சேர்ந்த உமாமகேஸ்வரி (47) மற்றும் அருண் (27), சுரேஷ் (33) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.