சொகுசு பங்களாவில் அழகிகளை வைத்து விபசாரம்; பெண் உள்பட 3 பேர் கைது
சங்கரன்கோவிலில் சொகுசு பங்களாவில் அழகிகளை வைத்து விபசாரம் செய்ததாக பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சங்கரன்கோவில்:
வாசுதேவநல்லூர் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி. இவர் சங்கரன்கோவில் சண்முகா நகர் பகுதியில் சொகுசு பங்களா ஒன்றை வாடகைக்கு எடுத்து அங்கு அழகிகளை வரவழைத்து புரோக்கர்கள் மூலம் விபசாரம் செய்வதாக சங்கரன்கோவில் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் பெண் போலீசாருடன் சென்று அந்த சொகுசு பங்களாவில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு அழகிகளை வைத்து விபசாரம் செய்ததாக, மகேஸ்வரி, சங்கரன்கோவில் சங்குபுரம் 4-ம் தெருவை சேர்ந்த சுதாகர், வாசுதேவநல்லூர் கோட்டையூர் பகுதியை சேர்ந்த மாரித்துரை ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.