மசாஜ் சென்டரில் இளம்பெண்களை வைத்து விபசாரம்

ஓசூரில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-02-21 18:45 GMT

ஓசூர்

ஓசூரில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

விபசாரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மசாஜ் சென்டர், ஸ்பா என்ற பெயர்களில் பல்வேறு இடங்களில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடந்து வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூருக்கு புகார்கள் வந்தன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் ஓசூர் வைஷ்ணவி நகரில் உள்ள ஒரு பியூட்டி பார்லர் மற்றும் மாருதி நகர் பகுதியில் உள்ள ஒரு ஸ்பா சென்டர் ஆகியவற்றில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் வினோத்குமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர். அங்கு இளம்பெண்களை வைத்து விபசாரம் செய்தது தெரிய வந்தது.

கைது

இதையடுத்து அதன் உரிமையாளரான ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் மாடல் காலனியை சேர்ந்த பிரகாஷ் (வயது 46) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இவர் ஓசூரில் சீதாராம் நகரில் தங்கி பியூட்டி பார்லர், ஸ்பா சென்டர் ஆகியவற்றில் இளம்பெண்களை வைத்து விபசாரம் செய்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக பெங்களூரு நாகசெட்டிஹள்ளி ராமகிருஷ்ணப்பா லேஅவுட்டைச் சேர்ந்த அழகுகலை நிபுணர் தீபிகா (32) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்