வாடகை வீட்டில் விபசாரம்; 2 பெண்கள் மீட்பு

நாகர்கோவிலில் வாடகை வீட்டில் விபசாரத்தில் ஈடுபட்ட 2 பெண்களை போலீசார் மீட்டனர். மேலும் இதுதொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-06 18:45 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் வாடகை வீட்டில் விபசாரத்தில் ஈடுபட்ட 2 பெண்களை போலீசார் மீட்டனர். மேலும் இதுதொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

வீட்டில் விபசாரம்

நாகா்கோவில் ஆசாரிபள்ளம் இந்திரா நகர் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் இரவு நேரங்களில் அடிக்கடி ஆண்களும், பெண்களும் வந்து செல்வதாக இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அந்த பகுதி மக்கள் ஆசாரிபள்ளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அந்த வீட்டை ரகசியமாக கண்காணித்தனர்.

இந்தநிலையில் நேற்று இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மரிபா மற்றும் போலீசார் அந்த வீட்டில் அதிரடியாக நுழைந்து சோதனையிட்டனர். அப்போது அங்குள்ள ஒரு அறையில் 2 இளம்பெண்கள் அரை குறை ஆடையுடன் இருந்தனர். அவர்களுடன் ஒரு வாலிபரும் இருந்தார். உடனே போலீசாரை கண்ட அனைவரும் தப்பி ஓட முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர்.

வாலிபர் கைது

பின்னர் நடத்திய விசாரணையில், நெல்லை மாவட்டம் கண்ணன்குளத்தை சோ்ந்த 35 வயதுடைய ஒரு பெண், விருதுநகர் மாவட்டம் இலந்தைகுளத்தை சோ்ந்த 43 வயதுடைய பெண் என்பது தெரிய வந்தது. மேலும் அவர்களுக்கு அதிக பணம் தருவதாக ஆசைவார்த்தை கூறி விபசாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர்.

பெண்களுடன் உல்லாசமாக இருந்த நெல்லை மாவட்டம் ஆவரைகுளத்தை சேர்ந்த சங்கர் (வயது 24) என்பவரை போலீசார் கைது செய்தனர். மீட்கப்பட்ட 2 பெண்களும் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

மேலும் இந்த விவகாரத்தில் யார்? யாருக்கு? தொடர்பு இருக்கிறது எனவும் விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்