மசாஜ் சென்டரில் விபசாரம்;பெண் உள்பட 2 பேர் கைது5 பெண்கள் மீட்பு

மசாஜ் சென்டரில் நடந்த விபசாரம் தொடா்பாக பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனா்.

Update: 2023-09-07 00:53 GMT

ஈரோடு பெருந்துறை ரோடு செங்கோடம்பள்ளம் பகுதியில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் பெண்களை வைத்து விபசாரம் செய்வதாக, ஈரோடு தாலுகா போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது அந்த மசாஜ் சென்டரில் பெண்களை வைத்து விபசாரம் செய்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி, மசாஜ் சென்டர் உரிமையாளரான பெருந்துறை அருகே உள்ள சுள்ளிபாளையத்தை சேர்ந்த கமலேஷ் என்பவருடைய மனைவி ஈஸ்வரி (வயது 40), மேலாளரான திண்டல் செங்கோடம்பள்ளம் பகுதியை சேர்ந்த சவுகத் அலி (30) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அந்த மசாஜ் சென்டரில் இருந்து 30 வயது முதல் 35 வயதுடைய 5 பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர். இதேபோல் கடந்த மாதம் 27-ந்தேதி மசாஜ் சென்டரில் விபசார தொழில் செய்த, ஈரோடு மாணிக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த சிவா (41) என்பவர் கைது செய்யப்பட்டு, அந்த சென்டரில் இருந்து 6 இளம்பெண்கள் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்