ஓட்டலில் விபசாரம்; புரோக்கர் உள்பட 3 பேர் கைது

ஓட்டலில் விபசாரம்; புரோக்கர் உள்பட 3 பேர் கைது

Update: 2023-02-12 18:45 GMT

காந்திபுரம்

கோவை காந்திபுரம் அருகே சாஸ்திரி ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் அழகிகளை வைத்து விபசாரம் நடத்துவதாக காட்டூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அங்கு அழகிகளை வைத்து விபசாரம் நடத்துவது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கு அடைத்து வைக்கப்பட்டு இருந்த 23 மற்றும் 24 வயதான அழகிகளை மீட்டதுடன், அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய புரோக்கரான பேரூர் சரவணன் (வயது 39), ஓட்டல் ஊழியர் முகமது ஆரிப்(23), ஹரிகுமார் (30) ஆகியோரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்