வீட்டில் விபசாரம்; ஒருவர் கைது

வீட்டில் விபசாரம் நடத்தியது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-08-06 20:28 GMT

கே.கே.நகர்:

திருச்சி கே.கே.நகர் உடையான்பட்டி பகுதியில் வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து விபசார தடுப்பு போலீசார், அந்த வீட்டில் நேற்று மாலை சோதனை மேற்கொண்டனர். இதில், அங்கு பெண்களை வைத்து விபசாரம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து பெட்டைவாய்த்தலை நேரு நகரை சேர்ந்த கார்த்திக் (வயது 37) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒரு பெண் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்