பாகலூரில்வெளிமாநில இளம்பெண்களை வைத்து விபசாரம்பெண் புரோக்கர் உள்பட 2 பேர் கைது

Update: 2023-09-28 19:00 GMT

ஓசூர்:

பாகலூரில் உள்ள குடியிருப்பு பகுதியில் வெளிமாநில இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்திய பெண் புரோக்கர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வெளிமாநில அழகிகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் வீடுகளை வாடகைக்கு எடுத்து வெளிமாநில இளம்பெண்களை வைத்து விபசாரம் நடைபெறுவதாகவும், ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர் என்ற பெயரில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாகவும் போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூருக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து குடியிருப்பு பகுதிகளை கண்காணிக்கவும், ஸ்பா சென்டர்கள், மசாஜ் சென்டர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கவும் அவர் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

2 பேர் கைது

இந்த நிலையில் ஓசூர் அருகே பாகலூரில் வீடு ஒன்றிற்கு அடிக்கடி ஆண்கள் வந்து செல்வதாக பாகலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாகலூர் போலீசார் நேற்று முன்தினம் அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அதில் வீட்டில் வெளிமாநில இளம்பெண்கள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து இளம்பெண்களை மீட்ட போலீசார், அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய பெண் புரோக்கர் சூளகிரி தாலுகா பேரிகை அருகே உள்ள நரிபுரத்தைச சேர்ந்த நஞ்சப்பா என்பவரின் மனைவி மஞ்சுளா (வயது38), கர்நாடக மாநிலம் மாலூர் அருகே உள்ள வாலாவை சேர்ந்த முனிராஜ் (45) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்