புதிய தொடக்கப் பள்ளிகளை தொடங்க கருத்துருக்களை அனுப்பலாம் - அதிகாரிகளுக்கு கல்வித்துறை உத்தரவு

புதிய தொடக்கப் பள்ளிகளை தொடங்க கருத்துருக்களை அனுப்பலாம் என அதிகாரிகளுக்கு கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2023-02-04 15:54 GMT

சென்னை,

தமிழ்நாடு இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை விதிகளின்படி தேவையின் அடிப்படையில் புதிய தொடக்கப் பள்ளிகளை தொடங்கவும், ஏற்கனவே இருக்கும் தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

புதிய தொடக்கப் பள்ளி மற்றும் தரம் உயர்த்தப்பட வேண்டிய ஆரம்பப் பள்ளி அமைந்து குடியிருப்பு பகுதிகள் குறித்த விவரங்களை புவியியல் தகவல் முறைமை வரைபடத்துடன் பள்ளிக்கல்வி இயக்ககத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். புதிய பள்ளி தொடங்கும் பட்சத்தில் அதற்கான எண்ணிக்கையில் போதிய மாணவர்களும் இருக்க வேண்டும்.

மேலும் சுட்டிக்காட்டப்படும் இடங்களுக்கு அருகில் இருக்கும் பள்ளிகளின் விவரங்களையும் அதனுடன் இணைத்திருக்க வேண்டும். நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட வேண்டிய பள்ளிக்கு கூடுதல் கட்டிடம், இடம், கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உறுதி செய்து அதற்கான அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்