இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நடைபயண பிரசாரம்
ஊத்தங்கரையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நடைபயண பிரசாரம் செய்தனர்.
ஊத்தங்கரை
ஊத்தங்கரையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பா.ஜ.க. அரசை அகற்றுவோம், நாட்டையும் மக்களையும் காப்போம் என ஒன்றிய அரசை கண்டித்து ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து நான்கு முனை சந்திப்பு வரை நடைபயண பிரசாரம் நடைபெற்றது. இதற்கு நகர செயலாளர் சிவலிங்கம் தலைமை தாங்கினார். இதில் திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் சுந்தரேசன் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இந்த நிகழ்ச்சில் நகர துணை செயலாளர் காமராஜ், குமார், மாவட்ட துணை செயலாளர் சின்னசாமி, மாநில குழு கண்ணு, நகர செயலாளர் லோகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.