பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் கல்குவாரி செயல்பட இருந்த தடையை நீக்கி அரசாணை வெளியீடு
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி எல்லையில் கல்குவாரி செயல்பாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
சென்னை,
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி எல்லையில் கல்குவாரி செயல்பாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு தமிழக அரசின் தொழில் துறையால் கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்தத்தின் படி, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் எல்லையில் இருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்குள் சுரங்கம் தோண்டுதல், பாறை உடைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதனால் பல குவாரிகள் செயல்பட முடியாமல் இருந்தது அரசின் கவனத்துக்கு வந்தது. கடந்த ஜூன் 16-ம் தேதி நடைபெற்ற சுரங்கத்துறை அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டத்தில், திருத்தம் கொண்டு வரவும் வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் எல்லையில் இருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்குள் உள்ள சுரங்கம் மற்றும் குவாரிகள் செயல்பட இருந்த தடை விலக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.