126 மனுக்களுக்கு உடனடி தீர்வு

சிறப்பு குறை தீர்க்கும் முகாமில் 126 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டதாக போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் கூறினார்.

Update: 2023-04-08 19:08 GMT

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அனைத்து துணை சூப்பிரண்டு அலுவலகங்கள் மற்றும் போலீஸ்நிலையங்களில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டது. இதில் 181 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு 126 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் மீதும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்