ரூ.57 லட்சத்தில் திட்டப்பணிகள்

ரூ.57 லட்சத்தில் திட்டப்பணிகளை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

Update: 2023-05-01 19:00 GMT

கயத்தாறு:

கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து கயத்தாறு ஆசூர் கிராமத்தில் ரூ.9.90 லட்சம் மதிப்பில் சிமெண்டு சாலை, அரசன்குளம் கிராமத்தில் ரூ.15 லட்சம் மதிப்பில் வாறுகால், பேவர் பிளாக் சாலை, சிதம்பராபுரம் கிராமத்தில் ரூ.32 லட்சம் மதிப்பில் சமுதாய நலக்கூடம் அமைக்கும் பணி தொடக்க விழா நடந்தது.

கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதில் கயத்தாறு அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் வண்டானம் கருப்பசாமி, கடம்பூர் நகரச் செயலாளர் வாசமுத்து, முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆசூர் காளிபாண்டியன், ஒன்றிய மாணவரணி செயலாளர் நவநீதகண்ணன், ஆசூர் பஞ்சாயத்து தலைவர் சண்முகம், துணைத்தலைவர் மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்