ரூ.51.36 லட்சத்தில் திட்டப்பணிகள்

காட்டிநாயனப்பள்ளி ஊராட்சியில் ரூ.51.36 லட்சத்தில் திட்டப்பணிகளை மதியழகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

Update: 2022-12-21 18:45 GMT

கிருஷ்ணகிரி ஒன்றியம் காட்டிநாயனப்பள்ளி ஊராட்சியில் வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு காட்டிநாயனப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா வெங்கடேசன் தலைமை தாங்கினார். இதில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு ஊராட்சியில் ரூ.11.75 லட்சம் மதிப்பில் தார்சாலை, மேல்கரடிகுறியில் ரூ.11.77 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடை, கே.பூசாரிப்பட்டி தொடக்கப்பள்ளியில் கழிவறை, மேல் கரடிகுறி அரசு உயர்நிலைப்பள்ளியில் சைக்கிள் நிலையம் உள்பட 8 பணிகளுக்கு மொத்தம் ரூ.51.36 லட்சம் மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை செய்து, பணிகளை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த, 100-க்கும் மேற்பட்டோர் மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. முன்னிலையில் தங்களை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து மாவட்ட செயலாளர் வரவேற்றார். முன்னதாக காட்டிநாயனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைச்சர் உதயநிதி பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சாவித்திரி கடலரசுமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தில், கிருபாகரன், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தன், தனசேகரன், மாவட்ட கவுன்சிலர் வித்யாசங்கர், ஒன்றிய கவுன்சிலர் கலா வேலாயுதம், கவுன்சிலர்கள் வேல்மணி, தனலட்சுமி பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்