ரூ.2¾ லட்சத்தில் திட்டப்பணிகள்
மாதேப்பட்டியில் ரூ.2¾ லட்சத்தில் திட்டப்பணிகளை அசோக்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி ஒன்றியம் கங்கலேரி ஊராட்சி மாதேப்பட்டி கிராமத்தில், ஒன்றிய பொது நிதியில் இருந்து உக்கிரமாரியம்மன் கோவில் வளாகத்தில் ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் சிமெண்டு கற்கள் அமைக்கப்படுகிறது. திட்டப்பணிக்கு பூமி பூஜை நடந்தது. இதில் அசோக்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
இதில், ஒன்றியக்குழுத்தலைவர் அம்சா ராஜன், மேற்கு ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன், கவுன்சிலர்கள் காசி, மகேந்திரன், ஒப்பந்ததாரர் ஒம்பலக்கட்டு ராஜி, கிளைச் செயலாளர் அருணாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.