ரூ.80 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா

திருச்செந்தூர் யூனியனுக்கு உட்பட்ட பகுதியில் ரூ.80 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகளுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார்.

Update: 2023-06-25 19:00 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் யூனியனுக்கு உட்பட்ட பகுதியில் ரூ.80 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகளுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார்.

அடிக்கல் நாட்டு விழா

திருச்செந்தூர் யூனியனுக்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட பஞ்சாயத்து மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.80 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு அந்தந்த பகுதிகளில் அடிக்கடி நாட்டு விழா நடந்தது.

மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி தலைமை தாங்கினார். தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு, திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்தார். இதில், வீரபாண்டியன்பட்டினம் ரூரல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அடைக்கலாபுரம் தோமையார் தெருவில் ரூ.30 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் சிமெண்டு சாலை, வீரபாண்டியன்பட்டினம் பஞ்சாயத்து பகுதியில் உள்ள சூரியா ஆஸ்பத்திரியில் இருந்து ஐ.எம்.ஏ. மஹால் வரை ரூ.30 லட்சம் மதிப்பில் மழை நீர் வடிகால் ஓடை அமைப்பதற்கும், வீரபாண்டியன்பட்டினம் சவேரியார் தெருவில் ரூ.20 லட்சம் மதிப்பில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி அமைப்பதற்கும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார்.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

மேலும், வீரபாண்டியன்பட்டினம் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.21 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில், திருச்செந்தூர் தாசில்தார் வாமணன், யூனியன் ஆணையர் அன்றோ, வட்டார வளர்ச்சி அலுவலர் பொங்கலரசி, வருவாய் ஆய்வாளர் அமிர்த கண்ணன், கிராம நிர்வாக அலுவலர் வேல்ஜோதி, அடைக்கலாபுரம் பங்கு தந்தை பீட்டர் பால், தி.மு.க. மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், திருச்செந்தூர் நகராட்சி துணை தலைவர் செங்குழி ரமேஷ், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் ஸ்ரீதர் ரொட்ரிகோ, வீரபாண்டியன்பட்டினம் பஞ்சாயத்து தலைவர் எல்லமுத்து, துணை தலைவர் ஜெகதீஸ் வீ.ராயன், வீரபாண்டியன்பட்டினம் ரூரல் பஞ்சாயத்து தலைவர் வசந்தி, திருச்செந்தூர் நகர செயலாளர் வாள்சுடலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்