வளர்ச்சி பணிகளை திட்ட அலுவலர் ஆய்வு
போலகம் ஊராட்சியில் வளர்ச்சி பணிகளை திட்ட அலுவலர் ஆய்வு செய்தார்.
திட்டச்சேரி:
திருமருகல் ஒன்றியம் போலகம் ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமை திட்ட அலுவலர் செல்வம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.போலகம் ஊராட்சியில் நாகை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணிகளையும், ரூ.12 ஆயிரத்து 500 மதிப்பில் நீர் உறிஞ்சி குழி அமைக்கப்பட்டுள்ளதையும், தலா ரூ.48 ஆயிரம் மதிப்பில் வழங்கப்பட்டுள்ள 3 குப்பை வண்டிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஜவகர், ஊராட்சி மன்ற தலைவர் பவுஜியாபேகம் அபுசாலி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், ஊராட்சி செயலாளர் சாமிநாதன் மற்றும் அலுவலர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உனிருந்தனர்.