அட்மா திட்ட உழவர் விழா

அட்மா திட்ட உழவர் விழா நடந்தது.

Update: 2023-09-02 18:21 GMT

தோகைமலை வட்டார வேளாண்மைத்துறை அட்மா திட்டத்தின் கீழ் உழவர் விழா நடைபெற்றது. இதற்கு கரூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கலைச்செல்வி தலைமை தாங்கினார். தோகைமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மதன்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக புழுதேரி ஊராட்சி மன்றத்தலைவர் தனலட்சுமி மகாமுனி கலந்து கொண்டு பேசினார்.

விழாவில், தமிழ்நாடு அரசு வழங்கி வரும் வேளாண்மைத்துறை திட்டங்கள், இடுபொருள் இருப்பு விவரங்கள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்து கூறப்பட்டது. இதில் உதவி கால்நடை மருத்துவர் புஷ்பலதா, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை உதவி வேளாண்மை அலுவலர் வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி வேளாண்மை அலுவலர் முனீஸ்வரன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்