வளர்ச்சி பணிகளை திட்ட இயக்குனர் ஆய்வு

செம்பராம்பட்டில் வளர்ச்சி பணிகளை திட்ட இயக்குனர் ஆய்வு செய்தாா்.

Update: 2023-05-25 18:45 GMT

சங்கராபுரம்:

சங்கராபுரம் அருகே உள்ள செம்பராம்பட்டு கிராமத்தில் வளர்ச்சி பணிகளை ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராணி ஆய்வு மேற்கொண்டார். அந்த ஊராட்சியில், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வகுப்பறை பணி, நூலக பராமரிப்பு பணி, ஊராங்காணியில் நடைபெற்று வரும் பள்ளிக்கட்டிட பணி, ரங்கப்பனூர் மற்றும் மல்லாபுரம் கிராமத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணி, அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணி ஆகியவற்றை அவர் பார்வையிட்டார். ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்லதுரை, செல்வகணேஷ், ஒன்றிய பொறியாளர் அரிகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் வைத்தியநாதன், மல்லிகா, அர்ச்சனாகாமராஜ், துணை தலைவர் ராதிகாபாஸ்கர் ஆகியோர் உடன் இருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்