கோவில் நிலத்தில் அரசு அலுவலகம் கட்ட தடை- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

கோவில் நிலத்தில் அரசு அலுவலகம் கட்ட தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது

Update: 2023-05-22 20:36 GMT


சிவகங்கையைச் சேர்ந்த தினகரன், விக்னேஷ் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா, வடக்கு சிங்கம்புணரி பகுதியில் கோவில் நிலம் என வகைப்படுத்தப்பட்ட நிலத்தில் அரசு கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது ஏற்கத்தக்கதல்ல. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே சிங்கம்புணரி தாலுகாவில் கோவில் நிலம் என வகைப்படுத்தப்பட்ட நிலத்தில் அரசு கட்டிடம் கட்டுவதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், சிங்கம்புணரி தாலுகா பகுதியில் கோவில் நிலம் என வகைப்படுத்தப்பட்ட நிலத்தில் எவ்விதமான கட்டுமான பணிகளையும் நடத்தக்கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக சிவகங்கை மாவட்ட கலெக்டர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டு, இந்த வழக்கை ஜூன் 9-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்