மதுபான விற்பனை சலுகைகள் தொடர்பான விளம்பரம் செய்ய தடை - புதுச்சேரி கலால்துறை

மதுபான விற்பனை சலுகைகள் தொடர்பான விளம்பரம் செய்ய தடை விதித்து புதுச்சேரி கலால்துறை உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-07-02 06:21 GMT

புதுச்சேரி,

புதுச்சேரி அரசு துணை ஆணையர் அலுவலகம் (கலால்) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி கலால் துறையில், மதுபான விற்பனை உரிமம் பெற்ற உரிமையாளர்கள் தங்களது மதுபான கடைகள், உணவகங்கள், விடுதிகள் மதுபான விற்பனை சம்பந்தமான சலுகைகள் அதாவது ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், பெண்களுக்கு மது இலவசம், மது வாங்கினால் பரிசு பொருள்கள் இலவசம் போன்றவற்றை குறித்த விளம்பர பதாகைகள், சுவரொட்டிகள் வைத்துள்ளதாக தெரிய வருகிறது.

மேற்கூறிய மதுபானம் விற்பனை சலுகைகள் சம்பந்தமான பதாகைகள் சுவரொட்டிகள், நாளேடுகளில் வெளியிடுதல், பரிசு பொருட்கள் வழங்குதல் அல்லது வேறு எந்த விதத்திலாவது விளம்பரம் செய்தல் புதுச்சேரி கலால் வீதிகளின்படி தடை செய்யப்பட்டுள்ளது.

எனவே மேற்கூறிய மதுபான விற்பனை உரிமை பெற்றவர்கள் தங்களது மதுபான கடைகள், உணவகங்கள், விடுதிகள், சமூக வலைதளங்களில் உள்ள விளம்பரங்களை உடனடியாக நீக்கும்படி எச்சரிக்கப்படுகின்றது. தொடர்பான விதி மீறல்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு புதுச்சேரி கலால் விதிகளின்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்