ரூ.4 லட்சம் மதிப்பில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பறிமுதல்

பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் போலீசார் நடத்திய சோதனையில் ரூ.4 லட்சம் மதிப்பிலான போதை பொருட்களை லாரியுடன் பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்தனர்.

Update: 2022-10-21 17:39 GMT

பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் போலீசார் நடத்திய சோதனையில் ரூ.4 லட்சம் மதிப்பிலான போதை பொருட்களை லாரியுடன் பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்தனர்.

போலீ்ஸ் சூப்பிரண்டு உத்தரவு

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன், இரவு நேரங்களில் நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டுமென போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார் அவரது உத்தரவின் பேரில் ஆங்காங்கே உள்ள போலீசார் சுங்கச்சாவடிகளில் இரவு நேரங்களில் வாகன தணிக்கை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் இன்ஸ்பெக்டர் கருணாகரன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அதனை ஓட்டி வந்த டிரைவர் பார்சல் ஏற்றிக்கொண்டு பெங்களூரிலிருந்து சென்னை போவதாக கூறினார் சந்தேகம் அடைந்த போலீசார் டிரைவரிடம் லாரியை பள்ளிகொண்டா போலீ்ஸ் நிலையத்துக்கு ஓட்டிச்செல்லுமாறு கூறி அழைத்து வந்தனர்.

டிரைவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது அவர் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த செல்வராஜ் (வயது 50) என்பது ெதரியவந்தது.

அவர் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு தினமும் பார்சல்களை ஏற்றி செல்வது வழக்கம் எனவும் தன்னிடம் பெங்களூருவில் உள்ளவர்கள் 68 மூட்டைகளை லாரியில் ஏற்றி சென்னையில் இறக்க வேண்டும் எனவும் கூடுதலாக பணம் தருவதாகவும் கூறினார்கள்.

அதன்படி இந்த மூட்டைகளை ஏற்றி செல்வதாகவும் மூட்டையில் என்ன உள்ளது என்ற விவரம் தெரியவில்லை எனவும் கூறினார்.

போதை பொருட்கள்

இதனையடுத்து பள்ளிகொண்டா போலீசார் மூட்டைகளை பிரித்துப் பார்த்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பாக்கெட்களாக 600 கிலோ எடை இருந்ததை லாரியுடன் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும்.

இதனையடுத்து லாரி டிரைவர் செல்வராஜையும் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்