மாணவ-மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி

அஞ்சாறுவார்த்தலை அரசு பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-02-10 18:45 GMT

குத்தாலம்:

குத்தாலம் அருகே அஞ்சாறுவார்த்தலையில் அரசு உதவி பெறும் ஆரம்ப தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திருமணஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் கணேசன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சேகர், சோலைமுத்து, விஜயகாந்த் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினர். நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஹெலன் மற்றும் ஆசிரியை ராஜலட்சுமி உள்ளிட்ட மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்