மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி

திருப்பத்தூரில் மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2022-07-01 17:42 GMT

திருப்பத்தூர் தாலுகா சின்னாரம்பட்டி ஊராட்சியில் மங்கலபள்ளி மற்றும் சின்னாரம்பட்டி அரசு பள்ளிக்கு கம்ப்யூட்டர், சுத்திகரிக்கும் குடிநீர் வழங்கும் எந்திரம் மற்றும் மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் ஆசிரியர் எம்.சண்முகம் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் தாமோதரன், துணைத்தலைவர் தேவிகா முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சீட்ரிக்ஸ் எஸ்.முரளிதரன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பள்ளிக்கு கம்ப்யூட்டர், சுத்திகரிக்கும் குடிநீர் எந்திரம் மற்றும் 800 பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நோட்டு, புத்தகங்களை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் கந்திலி ஒன்றியக்குழு தலைவர் திருமுருகன், மாவட்ட கவுன்சிலர் குணசேகரன் மற்றும் பொதுமக்கள், பெற்றோர்கள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஜெயசக்தி, சித்ரா ஆகியோர் நன்றி கூறினர்.

இதேபோன்று விஷமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கம்ப்யூட்டர் மற்றும் நோட்டு, புத்தகங்களை நல்லதம்பி எம்.எல்.ஏ. வழங்கினார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் அழகிரி, ஒன்றிய கவுன்சிலர் ஹேமலதா வினோத்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் தலைமை ஆசிரியர் பழனிசாமி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்