உளுந்தை அரசு பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி

உளுந்தை அரசு பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2023-08-17 12:10 GMT

கடம்பத்தூர் அடுத்த உளுந்தை ஊராட்சியில் உள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளியில் நேற்று பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக சைக்கிள் மற்றும் பள்ளிக்கு மேஜை, நாற்காலிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு உளுந்தை ஊராட்சி மன்ற தலைவரும், கடம்பத்தூர் ஒன்றிய ஊராட்சிமன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவருமான உளுந்தை எம்.கே.ரமேஷ் தலைமை தாங்கி தனது சொந்த செலவில் மாணவ-மாணவிகளுக்கு கல்வியை ஊக்குவிக்கும் விதமாக 60 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.

அதை தொடர்ந்து அவர் பள்ளிக்கு மேஜை, நாற்காலிகள் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் கிருஷ்ணன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வசந்தா மற்றும் கவுன்சிலர்கள், ஆசிரியர்கள், கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்