பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம்

சங்கராபுரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம்

Update: 2022-12-18 18:45 GMT

சங்கராபுரம்

சங்கராபுரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் வடசிறுவள்ளூர் கிராமத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆவின் ஒன்றியக்குழு தலைவரும், ஒன்றிய செயலாளருமான ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் பாப்பாத்தி நடராஜன், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திலகவதி நாகராஜன், நகர செயலாளர் துரைதாகப்பிள்ளை, தலைமை செயற்குழு உறுப்பினர் கமருதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரதிநிதி பன்னீர்செல்வம் வரவேற்றார். கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட செயலாளரும், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினருமான உதயசூரியன், தலைமை கழக பேச்சாளர்கள் காமராஜ், முத்தையா, மாவட்ட முன்னாள் செயலாளர் அங்கையற்கண்ணி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

கூட்டத்தில் வக்கீல் பாலஅண்ணாமலை, மாவட்ட இளைஞர்அணி ஆறு.கதிரவன், ஒன்றிய கவுன்சிலர் குமாரிபன்னீர்செல்வம், ஊராட்சி மன்ற தலைவர் சத்யபாமாசம்பத், மாவட்ட நிர்வாகிகள் தயாளன், சங்கர், அம்பிகாவீரமணி, சீனு, ஒன்றிய நிர்வாகிகள் தர்மலிங்கம், செல்வம், சிங்காரவேலு, செல்வி இளங்கோ, முனுசாமி, பன்னீர், அன்பழகன், நகர நிர்வாகிகள் ரவி, கோவிந்தன், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்