விவசாயிகளுக்கு விளைபொருள் விற்பனை விழிப்புணர்வு முகாம்

ஆற்காடு அருகே விவசாயிகளுக்கு விளைபொருள் விற்பனை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Update: 2022-07-04 11:41 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டார தோட்டக்கலை வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறை சார்பில், ராணிப்பேட்டை மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சீனி ராஜ் ஆற்காடு வட்டார உதவி இயக்குனர் கமலி ஆகியோர் அறிவுறுத்தலின்படி விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை உழவு சந்தையில் விற்பனை செய்வது குறித்த விழிப்புணர்வு முகாம் ஆற்காடு ஒன்றியம் சர்வந்தங்கல், புன்னப்பாடி, தாழனூர் ஆகிய கிராமங்களில் நடைபெற்றது. முகாமிற்கு ஆற்காடு வட்டார தோட்டக்கலைத்துறை உதவி அலுவலர் தெய்வசிகாமணி தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் விளையும் விளை பொருட்களை சாகுபடி செய்து உழவர் சந்தையில் இடைத்தரகர்கள் இன்றி விற்பனை செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் தோட்டக்கலை மற்றும் வணிகத் துறை அலுவலர்கள் யோகேஷ், மும்தாஜ் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்