டெல்டா மாவட்டங்களில் 3½ லட்சம் டன் கரும்பு கொள்முதல்
திருமண்டங்குடி சர்க்கரை ஆலையில் டிசம்பர் மாதம் அரவை பணி தொடங்கப்பட்டு டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளிடம் இருந்து 3½ லட்சம் டன் கரும்பு கொள்முதல் செய்யப்படும் என சர்க்கரை ஆலை தலைமை ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
திருமண்டங்குடி சர்க்கரை ஆலையில் டிசம்பர் மாதம் அரவை பணி தொடங்கப்பட்டு டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளிடம் இருந்து 3½ லட்சம் டன் கரும்பு கொள்முதல் செய்யப்படும் என சர்க்கரை ஆலை தலைமை ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
கூட்டம்
மயிலாடுதுறையில் காவிரி டெல்டா பாசனதாரர் முன்னேற்றச் சங்கக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு அதன் தலைவர் குரு.கோபிகணேசன் தலைமை தாங்கினார். பொருளாளர் மதியழகன் முன்னிலை வகித்தார். செயலாளர் முட்டம் ராஜாராமன் வரவேற்றுப் பேசினார். இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் நாகை மாவட்ட கலெக்டரும், திருமண்டங்குடி சர்க்கரை ஆலையின் தலைமை ஆலோசகருமான முனுசாமி கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
3.50 லட்சம் டன் கரும்பு கொள்முதல்
திருமண்டங்குடி சர்க்கரை ஆலையின் எந்திர பழுதுநீக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணி முடிவடைந்து இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஆலை அரவை பணிக்கு தயாராகும். அப்போது மயிலாடுதுறை உள்பட டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளிடமிருந்து 3 லட்சத்து 50 ஆயிரம் டன் கரும்பு கொள்முதல் செய்யப்படும் என்றார்.
கூட்டத்தில் டெல்டா பகுதியில் ஒட்டுமொத்தமாக நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுவதால் ஏற்படும் சிரமங்களை தவிர்க்க கரும்பு சாகுபடி செய்யப் போவதாகவும் வழக்கம்போல் திருமண்டக்குடி ஆலைக்கு கரும்பை தருவதாகவும் விவசாயிகள் சிலர் கூறினர்.
தீர்மானம்
கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் முன்னோடி விவசாயி மங்கைநல்லூர் சண்முகநாதன், சித்தர்காடு பாரி, ஆலை மேலாளர் ராமமூர்த்தி, கரும்பு அலுவலர் ஜெயபாண்டியன் உள்படபலர் கலந்துகொண்டனர். முடிவில் இணைசெயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.