இசக்கியம்மன் கோவில் கொடை விழாவில் பால்குடம் ஊர்வலம்
கழுகுமலை இசக்கியம்மன் கோவில் கொடை விழாவில் பால்குடம் ஊர்வலம் நடந்தது.
கழுகுமலை:
கழுகுமலை மேலபஜார் பகுதியில் உள்ள இசக்கியம்மன் கோவில் கொடை விழா கடந்த 19-ந் தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. 25-ந் தேதி காலை 4 மணிக்கு கணபதி ஹோமம் மற்றும் அம்மனுக்கு தீர்த்தக்குடம் எடுத்து வந்து சிறப்பு வழிபாடு நடந்தது. நேற்று காலை 10.30 மணியளவில் கோவில் பூசாரி சேகர் தலைமையில் திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். போலீஸ் நிலையம் அருகே உள்ள விநாயகர் கோயிலில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம் மேலபஜார் வழியாக சென்று கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் 12 மணிக்கு உச்சிகால பூஜையை தொடர்ந்து அனைவருக்கும் பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.