பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம்
பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம் சென்றனர்
சிங்கம்புணரி
சிங்கம்புணரி அருகே கல்லம்பட்டியில் உள்ள பால்பழகாரி அம்மன் கோவிலில் 4-ம் ஆண்டு வருடாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி கோவில் முன்பு சிறப்பு யாக வேள்விகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து கிராமத்தில் இருந்து பக்தர்கள் சார்பில் பால் குட விழா நடைபெற்றது. கிராமத்தின் மையப்பகுதியில் இருந்து ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 300-க்கும் மேற்பட்டோர் பால்குடம் சுமந்து ஊரின் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.