தொழிற்சங்கத்தினர் மே தின ஊர்வலம்
சேலத்தில் தொழிற்சங்கத்தினர் மே தின ஊர்வலம் நடத்தினர்.
மே தினத்தையொட்டி சேலத்தில் தொழிற்சங்கங்களான ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு. ஆகியவை சார்பில் மே தின ஊர்வலம் நேற்று மாலை நடந்தது. அஸ்தம்பட்டி காந்தி ரோட்டில் தொடங்கிய இந்த ஊர்வலத்துக்கு ஏ.ஐ.டி.யு.சி. தேசிய குழு உறுப்பினர் முனுசாமி தலைமை தாங்கினார். ஊர்வலம் செரி ரோடு, கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம் வழியாக கோட்டை மைதானத்தை சென்றடைந்தது. தொடர்ந்து அங்கு மாவட்ட துணை தலைவர் தியாகராஜன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.