காலபைரவர் கோவிலில் பால்குட ஊர்வலம்

அஷ்டமி விழாவையொட்டி கந்திகுப்பம் காலபைரவர் கோவிலில் நடந்த பால்குட ஊர்வலத்தை செல்லகுமார் எம்.பி. தொடங்கி வைத்தார்.

Update: 2022-12-17 18:45 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பத்தில் உள்ள காலபைரவர் கோவிலில் 15-ம் ஆண்டு காலபைரவ அஷ்டமி விழா கடந்த 8-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. விழாவையொட்டி பால்குட ஊர்வலம் நடந்தது. இதை செல்லகுமார் எம்.பி. தொடங்கி வைத்தார். இதில் யானை, ஒட்டகம், குதிரை, எருதுகளுடன் பால் குட ஊர்வலம் சென்றது. கந்திகுப்பம் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ற ஊர்வலம் காமராஜர் நகர், செங்கொடி நகர் வழியாக சென்று கோவிலை வந்தடைந்தது. இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் நடராஜன், முன்னாள் மாவட்ட தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, காசிலிங்கம், நாஞ்சில் ஜேசு, மாவட்ட துணை தலைவர் சேகர், முன்னாள் தலைவர் ஆறுமுகம், வக்கீல் அசோகன், கோவிந்தசாமி, நகர தலைவர் யுவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்