வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்
தர்மபுரியில் நடந்த வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்.
தர்மபுரியில் நடந்த வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்.
விழிப்புணர்வு ஊர்வலம்
தர்மபுரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்கத் திருத்தம் செய்யும் பணி நடைபெற உள்ளது. இது தொடர்பாக மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வருகிற 12, 13, 25, 27 ஆகிய தேதிகளில் 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இதுபற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தர்மபுரியில் நேற்று வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலத்தை மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான சாந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் தர்மபுரி அரசு கலைக்கல்லூரியை சேர்ந்த தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நல பணித்திட்ட மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளுடன் கலந்து கொண்டனர்.
கோஷங்கள்
மேலும் அவர்கள் வாக்காளர் பட்டியலில் தகுதி உடைய வாக்காளர்கள் சேர்ப்பது தொடர்பாக விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பினர். இந்த ஊர்வலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், செந்தில் நகர் வழியாக இலக்கியம்பட்டியை சென்றடைந்தது. இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி உதவி கலெக்டர் ஜெயக்குமார், நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார், அரசு கலைக் கல்லூரி முதல்வர் கிள்ளிவளவன், தேர்தல் தனி தாசில்தார் சவுகத்அலி, தர்மபுரி தாசில்தார் ராஜராஜன், அரசு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.