ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்
பாலக்கோட்டில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
பாலக்கோடு:
பாலக்கோடு காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தை போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி தொடங்கி வைத்தார். இதில் போலீசார், பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து கடைவீதி, ஸ்தூபி மைதானம், பஸ் நிலையம், தக்காளி மார்க்கெட் உள்பட முக்கிய வழியாக சென்று ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும், சாலை பாதுகாப்பு குறித்தும் துண்டு பிரசுரங்கள் வழங்கினர். பின்னர் இருசக்கர வாகனத்தை ஓட்டுபவர்களும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். தவறும் பட்சத்தில் இரு சக்கர வாகனத்தின் அனைத்து ஆவணங்கள் மற்றும் ஓட்டுனர் உரிமம் பறிமுதல் செய்யப்படும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் பெண் போலீசார் கலந்து கொண்டனர்.