கொரோனா விழிப்புணர்வு ஊர்வலம்

பொம்மிடியில் கொரோனா விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2022-07-09 16:19 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பொம்மிடியில் மாணவ-மாணவிகள் பங்கேற்ற கொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கவுரிசங்கர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் பொம்மிடி பஸ் நிலையத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்றுரெயில் நிலையத்தில் முடிவடைந்தது. ஊா்வலத்தில் மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட வேண்டும். முககவசம், அணிந்து வெளியே செல்ல வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் டாக்டர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் சுகாதார துறையினர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்