மலையாண்டஅள்ளியில்பெண்கள் தீர்த்தக்குட ஊர்வலம்

மலையாண்டஅள்ளியில் பெண்கள் தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2023-09-09 19:30 GMT

காவேரிப்பட்டணம்:

காவேரிப்பட்டணம் ஒன்றியம் மலையாண்டஅள்ளியில் உள்ள தொம்மக்கல் முனியப்பன் கோவிலில் 3-ம் ஆண்டு கும்பாபிஷேக விழாவையொட்டி தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. சந்தாவரத்தான் கொட்டாய், பெருமாள் கொட்டாய், வேங்கடத்தான் கொட்டாய், பைரவ கவுண்டர் கொட்டாய், தர்மன் கொட்டாய், டிங்கான் கொட்டாய், முட்டைகான் கொட்டாய் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பெண்கள் தென்பெண்ணை ஆற்றில் இருந்து மேளதாளத்துடன் புனிதநீர் எடுத்து ஊர்வலமாக வந்தனர். பின்னர் தொம்மக்கல் முனியப்பனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்