கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசு

கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Update: 2022-08-23 18:18 GMT

ஆதனக்கோட்டை:

ஆதனக்கோட்டையில் ஆர்.சி.சி. அணியினர் சார்பில், 23-ம் ஆண்டு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த கிரிக்கெட் போட்டியில் 16 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. 4 சுற்றுகளாக போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் முதல் பரிசான ரூ.12 ஆயிரத்தை மின்னாத்தூர் ரோஜா குணால் அணியும், 2-ம் பரிசான ரூ.10 ஆயிரத்தை ஆதனக்கோட்டை ஆர்.சி.சி. அணியும், 3-ம் பரிசான ரூ.8 ஆயிரத்தை கொப்பம்பட்டி அணியும், 4-ம் பரிசு மாங்கனாப்பட்டி அணியினரும், 5-ம் பரிசு ஆதனக்கோட்டை சச்சின் பிரதர்ஸ் அணியினரும் பெற்றனர். பின்னர் வெற்றிபெற்ற அணியினருக்கு கோப்பைகள் மற்றும் பரிசினை ஆதனக்கோட்டை ஊராட்சி மன்றத்தலைவர் ஆர்.கண்ணன் வழங்கினார். கிரிக்கெட் போட்டியை ஆதனக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான ரசிகர்கள் கலந்து கொண்டு கண்டுகளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்