யோகா- ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
தோரணமலையில் யோகா- ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
பாவூர்சத்திரம்:
தென்காசி-கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோவிலில் உள்ள மண்டபத்தில், லட்சியம் அசோசியேசன் சார்பில் தென்தமிழக அளவிலான யோகா மற்றும் ஸ்கேட்டிங் போட்டி நடந்தது. ஆவுடையானூர் சி.ஜே. ஆஸ்பத்திரி டாக்டர்கள் தர்மராஜ், அன்புமலர் தர்மராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். நெல்லை தட்சணமாற நாடார் சங்கத்தலைவர் ஆர்.கே.காளிதாசன், சென்னை குளோபல் லிமிடெட் செல்லத்துரைசிங், தோரணமலை முருகன் கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். லட்சியம் அசோசியேசன் தலைவர் மு.பாலகணேசன் வரவேற்றார். வி.கே.முத்தையா, சரஸ்வதி, வி.என்.ரெசவு முகைதீன், மாலிக் பேகம் ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து போட்டிகள் நடந்தது. இதில் 15-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 400-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்று சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பழனிநாடார் எம்.எல்.ஏ. பரிசு வழங்கி பாராட்டினார். போட்டியில் நடுவர்களாக ஜெயபிரதாப்சிங், கார்த்திகா பார்த்திபன், கனகராஜ், சுரேஷ், சரவணன், அனுஷீலா ஆகியோர் பணியாற்றினர். கவிதா பாலகணேசன் நன்றி கூறினார். போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகள் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்று உள்ளனர்.