போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடத்தப்பட்ட தமிழ்நாடு நாள் விழா மற்றும் கலைஞர், பேரறிஞர் அண்ணா மற்றும் தந்தை பெரியார் ஆகியோரின் பிறந்தநாள் கட்டுரை, பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி, வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித் துறை இணை இயக்குனர் ராஜேஸ்வரி மற்றும் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.