போட்டியில் வென்ற மாணவிகளுக்கு பரிசு; இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. வழங்கினார்
போட்டியில் வென்ற மாணவிகளுக்கு இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. பரிசு வழங்கினார்.
சேரன்மாதேவி:
சேரன்மாதேவி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று பள்ளி மேலாண்மை குழு சார்பில், இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை மனு அளித்தனர். இதையடுத்து அந்த பள்ளிக்கூடத்தை இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து பள்ளிக்கூடத்துக்கு சத்துணவுக்கூடம், விளையாட்டு மைதானம் அமைத்து தர ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார்.
பின்னர் பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். தலைமை ஆசிரியை மரகதவல்லி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நெய்னா முகமது, பள்ளி மேலாண்மை குழு தலைவி சிவசரிதா தேவி, அ.தி.மு.க. மாவட்ட இலக்கிய அணி செயலாளர் மாடசாமி, ஒன்றிய செயலாளர் மாரிச்செல்வம், நகர செயலாளர் பழனிகுமார் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.