கலை போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு

கலை போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன

Update: 2022-06-03 20:28 GMT

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்ட அளவிலான கலை போட்டிகள் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் தஞ்சை மண்டல கலை பண்பாட்டு மைய அலுவலகத்தில் நடந்தது. குரலிசை, கருவி இசை, பரதநாட்டியம் ஆகிய போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியில் 105 பேர் கலந்து கொண்டனர். இதில் குரலிசை போட்டியில் மாணவி சங்கீதபிரியா முதலிடமும், மிரலானி 2-ம் இடமும், ஜெயஸ்ரீதேவி 3-ம் இடமும் பிடித்தனர். பரதநாட்டிய போட்டியில் லக்‌ஷா சிவகுமார் முதலிடமும், தேவிபிரியா 2-ம் இடமும், ஜான்சிபெசியா 3-ம் இடமும் பிடித்தனர். கருவி இசை போட்டியில் சிவச்சந்திரன் முதலிடமும், கீர்த்தனா 2-ம் இடமும், இந்திரஜித் 3-ம் இடமும், கிராமிய நடன போட்டியில் மோசஸ் முதலிடமும், நாகர்ஜூன் 2-ம் இடமும், விஷாலிபிரியா 3-ம் இடமும், ஓவிய போட்டியில் அபினேஷ் முதலிடமும், அல்காலிக் 2-ம் இடமும், மனோஜ் 3-ம் இடமும் பிடித்தனர். வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.6 ஆயிரமும், 2-ம் பரிசு ரூ.4,500-ம், 3-ம் பரிசாக ரூ.3500-ம் வழங்கப்பட்டன. இதில், மண்டல கலைபண்பாட்டு மைய உதவி இயக்குனர் நிலமேகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






Tags:    

மேலும் செய்திகள்