பொதுத்தேர்வில் வெற்றிபெற்ற அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பரிசு

பொதுத்தேர்வில் வெற்றிபெற்ற அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Update: 2023-05-31 12:02 GMT

நெமிலி வட்டார வள மையத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றிபெற்ற அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில் வட்டார கல்வி அலுவலர் அரசு கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றிபெற்ற பனப்பாக்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் நித்திஷ், நாகவேடு மேல்நிலை பள்ளி மாணவர் அருள்குமார் ஆகியோருக்கும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றிபெற்ற திருமால்பூர் பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவி மோகனப்ரியா, காட்டுப்பாக்கம் உயர் நிலை பள்ளி மாணவி லட்சுமி, உளியநல்லூர் உயர்நிலை பள்ளி மாணவி அபிதா ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

வட்டார வளமைய மேற்பார்வையாளர் பாலாஜி உள்பட மாணவர்களின் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்