பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு

அம்பேத்கர், கலைஞர் பிறந்த நாள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.

Update: 2023-08-07 19:36 GMT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், அம்பேத்கர் மற்றும் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளையொட்டி நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி, மாநில அளவில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் முதல் பரிசு பெற்ற பனப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி சு.பொற்செல்விக்கு சால்வை அணிவித்து, புத்தகம் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கிடையே மாவட்ட அளவில் நடந்த பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு முதல் பரிசு தலா ரூ.5000 வீதம் 2 பேருக்கும், இரண்டாம் பரிசு தலா ரூ.3000 வீதம் 2 பேருக்கும், மூன்றாம் பரிசு தலா ரூ.2,000 வீதம் 2 பேருக்கும், சிறப்பு பரிசு தலா ரூ.2,000 வீதம் 4 மாணவர்களுக்கும் காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு மாவட்ட அளவில் நடத்தப்பட்ட பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ -மாணவிகளுக்கு முதல் பரிசு தலா ரூ.5,000 வீதம் 2 பேருக்கும், இரண்டாம் பரிசு தலா ரூ.3,000 வீதம் 2 பேருக்கும், மூன்றாம் பரிசு தலா ரூ.2,000 வீதம் இரண்டு பேருக்கும் காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் நாகராஜன், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்