போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Update: 2023-07-30 19:42 GMT

களக்காடு:

களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பகம் சார்பில் உலக புலிகள் தின விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் நெல்லையில் விழிப்புணர்வு போட்டிகள் பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் 3-ம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா களக்காடு தலையணையில் நடந்தது.

விழாவிற்கு களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் தலைமை தாங்கினார். நெல்லை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசத்ய வள்ளி முன்னிலை வகித்தார். மாணவ-மாணவிகளுக்கு வனத்துறை சார்பில் சான்றிதழ் மற்றும் கேடயம் பரிசாக வழங்கப்பட்டது. அதன் பின்னர் மாணவர்களுடன் கலந்துரையாடல் நடந்தது. தொடர்ந்து மாணவர்கள் களக்காடு தலையணை சூழல் சுற்றுலா மையத்தை சுற்றிப் பார்க்க வனத்துறை வாகனத்தில் வனத்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டனர். களக்காடு வனச்சரகர் பிரபாகர் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்